அஜித் நடித்த துணிவு படம், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்று கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட்டது.




கரூர் மாநகராட்சியில்  எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்று கரூர் மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சியாக 10:30 மணி அளவில் திரையிடப்பட்டனர். 10:30 மணி அளவில் முதல் காட்சியாக திரையிடப்பட இருந்த நிலையில் கரூர் மாநகர, கோவை சாலையில் உள்ள ஒரே வளாகத்தில் உள்ள திரையரங்கில் துணிவு, வாரிசு ஆகிய 2 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளது. இதில் ரசிகர்கள் கொண்டாட போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது. டிக்கெட் மட்டும் பெற்றுக்கொண்டு நேராக திரைக்கு மட்டுமே செல்ல ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ரசிகர்கள் கொண்டாடுவதற்கான ரயில் நிலையம் அருகே தனித்தனியாக உள்ள இரண்டு திரையரங்குகளில் விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய படங்கள் திரையிடப்பட்டது.  இரண்டு திரையரங்குகளும் சுமார் 200 மீட்டர் தொலைவில் இருப்பதால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அந்தந்த திரையரங்கு முன்பு கொண்டாடும் வகையில் இன்று 10:30 மணி அளவில் முதற்காட்சி திரையிடப்பட்டது.




இந்த நிலையில் வாரிசு திரைப்படம் அரங்கிற்க்கு முன்பு விஜய் ரசிகர்கள் மேல தாளங்களுடன் பட்டாசு வெடித்து மாணவியர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். அதே போல துணிவு திரைப்படம் அரங்கேற்கு முன்பும் அஜித் ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். தல, தளபதி ஆகிய இரண்டு படங்களும் கரூர் மாநகர பகுதியில் 10:30 மணி அளவில் முதல் காட்சி ஒளிபரப்பு தொடங்கியதால் இரண்டு நடிகர்கள் ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்து நடனமாடி மகிழ்ச்சியில் கொண்டாடி மகிழ்ந்தனர்.




குளித்தலையில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வெளியாவதையொட்டி விஜய் ரசிகர்கள் டிஜே பார்ட்டியுடன்,வானவேடிக்கை நிகழ்த்தி உற்சாக கொண்டாட்டம்.



தமிழகம் முழுவதும் இன்று நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகிறது. கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள லட்சுமி திரையரங்கில் வாரிசு திரைப்படம் வெளியாகிறது.




 


இதனையடுத்து, இந்த வருடம் கரூர் மாவட்டம் குளித்தலையில் எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நள்ளிரவு 1 மணி முதல் வண்ண மின்விளக்குகள் ஒளிர டிஜே பார்ட்டியுடன் விஜய் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆராவரத்துடன் நடனம் ஆடியும், வாணவேடிக்கைகள், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்.


4 மணிக்கு முதல் சிறப்பு காட்சி திரையிட்டப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று ரசிகர்கள் டிக்கெட் பெற்று திரைப்படத்தினை கண்டு ரசித்தனர்.