கரூர் கோதுர் சாலையில் உள்ள நியாய விலைக்கடையில் தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மேலும் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளையும் அவர் வழங்கினார். 



பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு முழு கரும்புடன் கூடிய 21 பொங்கல் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் எனவும் அதில் சர்க்கரை பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் சேர்த்து மொத்தம் 21 பொருட்கள் இருக்கும் எனவும் ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அத்திட்டத்தை முதலமைச்சர் இன்று காலை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொங்கல் பரிசுகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தேர்வு பயம் காரணமாக 2ஆம் ஆண்டு மருத்துவ மாணவி தற்கொலை



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கள் போதை பொருள் அல்ல என்பது முதல்வருக்கு தெரியும் - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி


கரூர் மாவட்டத்தில் டோக்கன் முறையில் 593 நியாய விலை கடைகளில், மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 898 குடும்பங்களுக்கு, 17 கோடியே 53 லட்சம் மதிப்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வை கரூர் அடுத்த வேலுச்சாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி சுந்தரி குளித்தலை சட்டமன்ற உறுப்பினரும் மாணிக்கம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காதலன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காதலி தர்ணா


மேலும், கரூர் மற்றும் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 52 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி சிறப்பு நிதிகளை தமிழக முதல்வர் வழங்கி உள்ளார். விரைவில் கரூர் மாநகராட்சியில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழக முதல்வர் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று திட்டங்களை வழங்கி வருகிறார். கரூர் மாவட்டத்திற்கு 2000 கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டங்களை வழங்கியுள்ளார். இன்னும் பல திட்டங்கள் வழங்கப்பட உள்ளன என்றார்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சிகள் வன்முறையை தூண்டும்’ - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா