✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Pon Manickavel: பொன் மாணிக்கவேல் கைதாவாரா? ஜாமின் கிடைக்குமா? நாளை தீர்ப்பு..!

செல்வகுமார்   |  29 Aug 2024 05:28 PM (IST)

Pon Manickavel Case: சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி (ஐ.ஜி) பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில்,  சிபிஐ தரப்பில் முன்  ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து,  பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணை:

இந்த வழக்கின் விசாரணையானது, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ பதியப்பட்ட வழக்கு பிரிவுகள்  ஜாமீன் வழங்கக் கூடியதா? அல்லது ஜாமினில் விடுவிக்க முடியாததா என  நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிபிஐ தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி முன்ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிபிஐ பதியப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில் குறிப்பிட்டதாவது, "நீதிமன்றமானது, சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை நடத்தி  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. 

”ஜாமீன் வழங்க உத்தரவு தேவை”

ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு  அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை கெடுக்கும்  விதமாக உள்ளது. எனவே  இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்கரவர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய பணிக்காலத்தில் பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மனுதாரர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை அதற்கான முகாந்திரமும் இல்லை எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

ஜாமீன் வழங்க கூடாது - சிபிஐ:

சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் வாதத்தில் தெரிவித்ததாவது, “ மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது முன்ஜாமின் வழங்கினால் வழக்கின் சாட்சியங்களை கலைக்க நேரிடும் எனவே முன் ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

நாளை தீர்ப்பு:

இதனைத் தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் பொன் மாணிக்கவேல் மீது பதியபட்டுள்ள  வழக்கு ஜாமினில் விடுவிக்கக் கூடிய பிரிவா அல்லது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவா என்பது குறித்து விளக்கம் தேவை எனவே அது சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கின் தீர்ப்பை நாளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

Published at: 29 Aug 2024 05:13 PM (IST)
Tags: High Court Idol pon.manickavel Pon Manickavel Case madras high court branch
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Pon Manickavel: பொன் மாணிக்கவேல் கைதாவாரா? ஜாமின் கிடைக்குமா? நாளை தீர்ப்பு..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.