CM MK Stalin: ஆரத்தி! ஆட்டம் பாட்டம்! டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படம்! மு.க.ஸ்டாலினை ஆச்சரியப்படுத்திய அமெரிக்க வாழ் தமிழர்கள்!


அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்தும், ஆட்டம் பாட்டத்துடன் அங்கு வாழும் தமிழர்கள் வரவேற்பு அளித்தனர். டைம்ஸ் சதுக்கத்திலும் அவருக்கு படத்துடன் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டது.


அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சான் பிரான்ஸிஸ்கோ வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அங்கு அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாட்டு முறைப்படி ஆரத்தி எடுத்து அங்கு வாழும் தமிழ் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்,  அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கும் விதமாக கலச்தை சுற்றி வரவேற்பு அளித்தனர். தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவிலே தற்போது குடியேறியுள்ள நடிகரும், அரசியல்வாதியுமான நெப்போலியன் உள்பட அங்கு வசிக்கும் தமிழர்களும் வரவேற்றனர்


Madurai AIIMS : “5 வருஷமா என்ன பண்ணீங்க?” மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி நீதிமன்றம் சரமாரி கேள்வி..!


”2018ல் பிரதமர் நரேந்திர மோடியே அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை”


மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டி முடிப்பீங்க ? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.


சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை..!


சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக , நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 


”சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்



சென்னையில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை சார்பில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு நாட்களாக நடந்து வந்த இந்த விசாரணையில், இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்



”பெயரை கூட சொல்ல மாட்டேங்குறீங்க?” - மேடையில் ஆதங்கப்பட்ட அமைச்சர் சேகர்பாபு


சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பாக டயாலிசிஸ் மருத்துவமனை திறப்பு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு , மா.சுப்ரமணி கலந்து கொண்டு திறந்து வைத்தனர். அப்போது,  திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் இளைய அருணாவுக்கு மரியாதை செய்யவில்லை என மேடையிலேயே கண்டித்தார் அமைச்சர் சேகர்பாபு.