கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணைக்கு உதவுமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி  அவரது உறவினர்கள் கடந்த ஜூலை 17 ஆம் தேதி  பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது.



கள்ளக்குறிச்சி கலவரம்.. போலி தகவல் பரப்பியவர்களுக்கு ஸ்கெட்ச்... ட்விட்டரை நாடிய போலீசார்!


காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வன்முறை நடைபெற்ற இடங்களை  உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர்.


கிட்டதட்ட 10 நாட்கள் சட்டப்போராட்டத்திற்கு பின் ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 23 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 307 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கலவரம் நடந்த அன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளின் அடிப்படையில் பலரை தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளம் மூலம் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் சம்பவம் நடந்த அன்று எந்தெந்த கணக்குகளில் இருந்து வதந்தி, போலி தகவல்கள் பரப்பப்பட்டது, இத்தகைய பதிவுகளை பரப்ப உபயோகிக்கப்பட்ட கணக்குகள் குறித்த விவரங்களை தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ட்விட்டர், வாட்ஸ்அப், ட்விட்டர் மூலம் 32 வகையான போலி தகவல்கள் பரப்பபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண