தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே போலி மருத்துவர்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது. 

இந்தநிலையில், தமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவர்கள் மீது சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  செ. சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.

இதனையடுத்து, கடந்த 18 மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் தமிழ்நாடு முழுவதும் 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டரீதியாக கைது செய்யப்பட்டவர்கள் பட்டியல்:

காஞ்சிபுரம்  2
திருவள்ளூர் 9
விழுப்புரம் 4
கள்ளக்குறிச்சி 3
கடலூர் 4
வேலூர் 2
திருவண்ணாமலை 4
புதுக்கோட்டை 5
கரூர் 1
பெரம்பலூர் 8
அரியலூர் 4
தஞ்சாவூர் 10
திருவாரூர் 12
நாகப்பட்டினம் 3
கோவை 1
சேலம் 10
நாமக்கல் 1
தருமபுரி 2
கிருஷ்ணகிரி 5
மதுரை 1
திண்டுக்கல் 6
தேனி 5
சிவகங்கை 1