தீபாவளி தினத்தன்று மதியம் தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்தில் 29 வயது பெண் ஒருவர் காவல்துறையினரின் உதவியுடன் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அந்தப் பெண் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.


சாந்தினி என்கிற அந்தப் பெண் திருப்பத்தூரில் ரயிலில் ஏறியுள்ளார் ஆனால் பயணம் முழுவதும் அவருக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. அவரது குடும்பத்தினர் பயண டிக்கெட் பரிசோதகரிடம் (TTE) இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளனர். அவர் அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அந்த பெண்ணை பயணிகள் காத்திருக்கும் அறைக்கு அழைத்து வந்து மருத்துவரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், மருத்துவர் வருவதற்குள் சாந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது. பரமேஸ்வரி என்ற பெண் தலைமைக் காவலரின் உதவியால் சாந்தினிக்கு குழந்தை பிறந்துள்ளது.


அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயலட்சுமி கூறுகையில் ரயில் நிலையத்துக்கு சுமார் 2.20 மணிக்கு வந்தது. ஆனால் அந்தப் பெண் வந்த 10 நிமிடங்களுக்குள்  டெலிவரி  முடிந்தது என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.





மேலும், "எங்கள் தலைமைக் காவலர் பரமேஸ்வரி முழுப் பாராட்டுக்கு உரியவர். சாந்தினி என்கிற அந்தப் பெண் பெரம்பூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அரக்கோணம் ஸ்டேஷனில் வலியை உணர்ந்த அவர், உடனடியாக பயணிகள் காத்திருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நாங்கள் மருத்துவருக்குத் தகவல் தெரிவித்தோம். ரயில்வே மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் விரைந்து வந்தனர். ஆனால் அந்தப் பெண் அசௌகரியத்தை உணர ஆரம்பித்தார், பிளாட்பார்ம் பணியில் இருந்த எங்கள் போலீஸ்காரர் ஒருவர், பயணிகள் ஓய்வறையில் குழந்தையை பிரசவிக்க உதவினார். அந்த நேரத்தில் மருத்துவர் வந்து கூடுதல் சிகிச்சைகள் கொடுத்தார்.இது அந்தப் பெண்ணின் இரண்டாவது குழந்தை. தாய் மற்றும் சேய் இருவரும் தற்போது நலமாக உள்ளனர்." என்றார்.


முன்னதாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் , சென்னை பெருநகர பகுதிக்கான மூன்றாம் முழுமை திட்டம் ( 2027 - 2046 ) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலின் திட்ட தொடக்க பயிலரங்கம் சென்ற மாதம் நடைபெற்றது.


இதில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அன்பரசன் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் , திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் ரவி கலந்து கொண்டனர். 


அப்போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அன்பரசன் பேசுகையில், “ சென்னை முழுமை திட்டம் 3 - ன் படி அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரை விரிவடைய உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளது.அங்கு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.


மாநகர் வளர்ச்சி அடையும் போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், எதிர்கால தொழில் நுட்பம், தூய்மை போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். நீர் நிலைகளையும் வனப்பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.