ஆம்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளியை கைது செய்த காவலர்களை பாராட்டிய துணை காவல் கண்காணிப்பாளர்.

Continues below advertisement

பர்தா அணிந்து கொள்ளை:

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட முஹமதுபுறா மசூதி 2 ஆவது தெருவை சேர்ந்தவர் முபாரக் பாஷா இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வரும் நிலையில், கடந்த 31 ஆம் தேதி முபாரக் பாஷா தனது கடைக்கு சென்ற போது, அவரது வீட்டில் அவரது மனைவி சுல்தானா மற்றும் அவரது மகள் மற்றும் தனியாக இருந்துள்ளனர், இந்நிலையில் இதனை அறிந்த பர்தா அணிந்து வந்த நபர் முபாரக் பாஷாவின் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழ் வைப்பது போல் வீட்டினுள் சென்று,  சுல்தானாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளார், அப்பொழுது சுல்தானாவின் மகள் கத்த முயன்ற போது அவரது வாயில் துணியை வைத்து அடைத்து அறையில் பூட்டியுள்ளார்.

30 சவரன் தங்கம்:

அதனை தொடர்ந்து வீட்டின் அறையில் இருந்த பீரோவை உடைத்து, சுல்தானா தனது மகள் திருமணத்திற்காக  வைத்திருந்த 30 சவரன் தங்கநகை மற்றும் 5 லட்சம் பணத்தை  அந்நபர் கொள்ளையடித்துச்சென்றுள்ளார், பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் கொள்ளைச்சம்பவம் நடைப்பெற்ற வீட்டில் ஆய்வு செய்த போது, கொள்ளையடிக்க வந்த நபர் கொண்டு வந்த திருமண அழைப்பிதழ் வெறும் வெள்ளை காகிதம் என்பது தெரியவந்துள்ளது, அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

Continues below advertisement

குற்றவாளி கைது

இந்த கொள்ளைச்சம்பவம் நடைப்பெற்ற வீட்டில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி நேரில் ஆய்வு செய்தார்..இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் குறித்து ஆம்பூர் நகர  காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு  தீவிரமாக விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், சுல்தானாவின் தங்கை கணவரான தன்வீர் அஹமது என்பவர், இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்த நிலையில் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 30 சவரன் தங்கநகையை பறிமுதல் செய்து தன்வீ்ர் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்..

 குற்றவாளியை 5 நாட்களுக்குள் பிடித்த காவலர்களை ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் பாராட்டினார். மேலும் மனைவியின் அக்கா வீட்டில் பர்தா அணிந்து சென்று அவரை கத்தியை காட்டி மிரட்டி தங்கநகை மற்றும் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.