உலகம் முழுவதும் இன்று தமிழர்களால் திருவள்ளூர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் நிறுவப்பட்டிருந்த திருவள்ளூர் சிலைக்கு திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது,


“ அறிவே அடையாளம் என்பது ஒரு இனத்திற்கு தலையாய செய்தியாகும். பிரிட்டன் நாட்டை ஷேக்ஸ்பியர் தேசம் என்று அழைக்கப்படுவது போல, தமிழ்நாட்டை திருவள்ளுவர் நாடு என்று அழைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதைத்தான் திராவிட இயக்கத்தின் அறிஞர்களும், தமிழ் மக்களும் வலியுறுத்தி வந்தார்கள். திருக்குறளுக்கு போதுமான அளவு உரை எழுதப்பட்டுவிட்டது.


பாலமேடு ஜல்லிக்கட்டை இங்கு காணலாம்...




அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளை பாடமாக உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அனைத்து தமிழர்களும் தங்கள் நாவில் இருந்து 100 திருக்குறளையாவது ஒப்புவிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.


ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரலையில் காண : Live | Palamedu Jallikattu 2022 Live | ஜல்லிக்கட்டு 2022 நேரலை | Pongal 2022 | Jallikattu Live


திருவள்ளுவரின் புகழ்வாய்ந்த தினத்தில் கொரோனா தொற்று மூன்றாவது அலையை மிகவும் எளிதில் வெல்ல முடியாது என அறிவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி உள்ளிட்டவை கொண்டு மூன்றாவது அலையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் கடக்க இயலும்.”


இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க : Palamedu Jallikattu Live | பாலமேடு பாய்ச்சலுக்கு தயாரா? இன்றும் இடைவிடாத நேரலை செய்கிறது உங்கள் ABP நாடு... HD தரத்தில் கண்டு ரசிக்க கிளிக் பண்ணுங்க!




தமிழ்மொழியின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றியதில் திருவள்ளுவரின் பங்கு அளப்பரியது. அவர் எழுதிய திருக்குறள் உலகம் முழுவதும் இதுவரை பல நாடுகளிலும், பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்ப்ட்டு புத்தகங்களாக விற்பனை ஆகிவருகிறது. ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், அவன் வகிக்கும் பொறுப்பிற்கு ஏற்ப அவன் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று மிகவும் விளக்கமாக திருவள்ளுவர் எடுத்துரைத்திருப்பார். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் திருக்குறள் மிகவும் போற்றத்தகுந்த நூலாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Roshni Haripriyan | மறுபடியும் விஜய் டீவிக்கே வராங்களா பாரதி கண்ணம்மா? எப்படி? சர்ப்ரைஸ் தகவலால் குஷியான ரசிகர்கள்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண