பா.ம.க சார்பில் சென்னை கொளத்தூரில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது தெரிவித்ததாவது, யாருக்கு இந்த திருவிழா நடத்துகிறோமோ , அந்த உழவர்கள் கோவணத்துடன் தான் இருக்கிறார்கள். விளை நிலங்களை என்.எல்.சி நிறுவனம் எடுத்து கொள்ள பார்க்கிறது. இதை ஒருபோதும் நாங்கள் விட மாட்டோம். விளை நிலங்களை காப்பாற்ற நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். நெய்வேலியில் இருக்கும் விளை நிலங்களை காப்பாற்றுங்கள், அது உங்கள் பொறுப்பு என முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
வேதனை அளிக்கிறது:
பொங்கலுக்கு எந்த படம் வெற்றி அடையும் என்று இளைஞர்கள் அடித்து கொள்வது வேதனை அளிக்கிறது. எம்பிளாய்மெண்ட் அலுவலகத்தில் அடித்து கொள்ளுங்கள், நான் படித்துள்ளேன், எனக்கு ஏன் வேலை கிடைக்க வில்லை என்று. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் அடித்து கொள்வது கவலை அளிக்கிறது. இவ்விழாவில் துணிவு , வாரிசு திரைப்படத்தை மேற்கோள்காட்டி அன்புமணி ராமதாஸ் பேசினார்.
”தமிழ்நாடு ஏன் ஆளுநரால் ஏற்று கொள்ளமுடியவில்லை?:”
தமிழ்நாடா அல்லது தமிழகமா என்று விவாதங்கள் தற்போது செல்கிறது, தமிழ்நாடு என்று சொன்னால் ஏன் ஆளுநரால் ஏற்று கொள்ளமுடியவில்லை, என்ன பிரச்சனை உங்களுக்கு ?
ஆன்லைன் ரம்மியால் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறி போகி வருகிறது. இது வரை 100 பேர் வரை இறந்துள்ளனர். இதில் கவனம் செலுத்துங்கள். ஆன்லைன் விளையாட்டால் லட்ச கணக்கான குடும்பங்கள் நடு தெருவில் வந்துள்ளது. ஆனால் ஆளுநர் இது வரை தடைசெய்வதற்காக மசோதாவில் கையெழுத்து போடாமல் நிலுவையில் வைத்துள்ளார். கடந்த 3 நாளில் 2 பேர் உயிரிழந்துனர். இதற்கு காரணம் ஆளுநர்தான். தமிழ் நாட்டு மக்கள் நலன் கருதி ஆன்லைன் ரம்மியை தடைசெய்யுங்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.