கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தலைமையில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி சமத்துவ பொங்கல் வைத்து அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.


 




கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் சமத்துவ பொங்கல் வைத்தல், அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பொங்க பானைகளை பரிசு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் மாவட்ட ஆட்சித்தலைவர்  த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.


 




தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் 17 பானைகளில் பல்வேறு துறைகளின் சார்பாக சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பானைகளில் தமிழர்களில் மரபுபடி மஞ்சள் கொத்து கட்டி அருகே செங்கரும்பு வைத்து பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய வாகனமாக கருதப்படும் மாட்டு வண்டி ஏர் கலப்பை வைக்கப்பட்டு மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட  கங்கை குயில்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


அரசு அலுவலர்களுக்கு கோலப்போட்டி (பெண்களுக்கு மட்டும்),), கயிறு இழுத்தல், லக்கி கார்னர், பானை உடைத்தல், லெமன் இன்  ஸ்பூன், உள்ளிட்ட போன்ற  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கும், கோலப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கும், சிறந்த பொங்கல் வைத்தவர்களுக்கும் முதல் மற்றும் இரண்டு பரிசுகள் பாரம்பரியமிக்க பொங்கல் வைப்பதற்கான மண்பானைகளை பரிசுகளாக வழங்கப்பட்டது.




 


கலெக்டர் உட்பட அரசு அலுவலர்கள் அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் சார்பில் 17 பானைகளில் சிறு தானியம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொங்கல் வைக்கப்பட்டது. மேலும் மாட்டுவண்டி, ஏர், கலப்பை வைக்கப்பட்டு மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பெண் அலுவலர்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், லக்கி கார்னர், பானை உடைத்தல், லெமன் இன் ஸ்பூல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


இந்த பாரம்பரிய விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதானந்தம், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமில் அன்சாரி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, திட்ட இயக்குநர்  வாணிஈஸ்வரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சந்தியா, தனித்துணை ஆட்சியர் (கலால்) பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.