விழுப்புரம்: முல்லை பெரியாறு அணை வலிமையாக உள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்து இருந்தும் முல்லை பெரியாறு அணையில் மீண்டும் மீண்டும் அணைக் கட்ட முயற்சி செய்து வருவதை கேரள அரசு கைவிட வேண்டும் என்றும் முல்லை பெரியாறில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாதென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,


தமிழகத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த கூடாது என்றும் ஒரே வீட்டில் இரண்டிற்கு மேல் மின் இணைப்பு இருந்தால் அதனை ஒரே மின் இணைப்பாக மாற்றும் மின்சார வாரியத்தின் நடவடிக்கை கண்டிதக்கது என கூறினார். மின் இணைப்புகள் ஒரே மின் இணைப்பாக மாற்றும் போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் பாதிக்கப்படுமெனவும், இதனால் வீடு வாடகை விடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் கட்டனத்தை உயர்த்தி ஆணை வெளியிட்டது.


பாமகவின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணம் கடந்த ஆண்டு வீடுகளுக்கு ஜூலை மாதத்தில் உயர்த்தாமல் வணிக கட்டணங்களுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தியது. மின் கட்டணம் உயர்த்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் மின்சார வாரிய மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என கூறினார்.


திமுக கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலுக்காக 510 தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதில் பத்து விழுக்காடு கூட நிறைவேற்றவில்லை என்பதால் அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் 90 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலினும் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.


பொது சேவை பெறும் உரிமை சட்டம்


சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு 500 ரூபாய் முதல் பத்தாயிரம் வரை கையூட்டு கொடுக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அப்படி கையூட்டு கொடுத்தாலும் உடனடியாக அரசின் சேவைகள் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் பொது சேவை பெரும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டால் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கும் எனவும் அண்டை மாநிலங்கள் 20 மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் இருப்பதால் அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஐந்த சட்டத்தினை கொண்டு வந்து நிறைவேற்றவேண்டுமென கூறினார்.


முதல்வர் ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை


தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர்கள் சாதனை செய்து வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து முடித்த ஸ்டாலின் எந்த சாதனையும் செய்யவில்லை என்பதால் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் ஆவது சாதனை செய்து முத்திரை பதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கஞ்சாவை கட்டுப்படுத்த இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுமென முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் கஞ்சாவை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.


தமிழகத்தில் பாசன திட்டங்களை நிறைவேற்றாத அரசாக தான் திமுகவும் அதிமுகவும் உள்ளது. இரு கட்சிகளின் ஆட்சியில் தொலைநோக்கு பார்வையோ, மக்களின் மீது அக்கறையோ இல்லை அதனால் தான் இதுவரை ஒரு அணை கூட கட்டவில்லை என்றும் திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறுவது அணை என்று கூறமுடியாது ஏனென்றால் ஒரு டிஎம்சி நீர் கூட தேக்க முடியாத நிலை தான் உள்ளதாக தெரிவித்தார்.


நெல் குவிண்டாலுக்கு 700 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், தெலுங்கானா மாநிலத்தில் நெல் குவிண்டாலுக்கு 500 ரூபாய் வழங்கப்படுமென அறிவித்துள்ளது வரவேற்கும் திட்டம் எனவும், தமிழகத்தில் நெல் நடப்பாண்டில் பத்துலட்சம் டன் குறைந்துவிட்டுதாக கூறினார். நெல் குவிண்டாலுக்கு 700 ரூபாய் ஊக்கதொகை வழங்குவது சாத்தியமான ஒன்று இதற்கு 2800 கோடி ரூபாய் தான் செலவாகும் அதனை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.


முல்லை பெரியாறு அணையில் புதிய அணைகட்ட கேரள அரசு முயற்சி செய்து வருவதால் மத்திய அரசு புதிய அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளர். முல்லை பெரியாறு அணை வலிமையாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருந்தும் கேரள அரசு முல்லை பெரியாறு அணையில் மீண்டும் மீண்டும் அணை கட்ட முயற்சி செய்து வருவதை கைவிட வேண்டும்.


 பேருந்து நிலையம் ஏரியில் கட்டப்பட்டுள்ளது


விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையம் பூந்தோட்டம் ஏரியில் கட்டப்பட்டுள்ளதால் மழை நீர் தேங்குவதாகவும் திண்டிவனத்தில் ஏரியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதை கைவிட வேண்டுமென தெரிவித்தார். ஜிப்மர் புற நோயாளிகள் பிரிவு புத்தபூர்ணிமா நாளில் இன்று விடுமுறை அளித்துள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஜிப்மர் மருத்துவமனை இது விடுமுறை அளிக்க கூடாது. மேலும் திமுக ஆட்சியில் மூன்றாண்டு சாதனையில் காலை உணவு வழங்கியது மட்டும்தான் வேறு ஒன்றும் இல்லை என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.