குடியரசு பொருள் அப்போ புரியல... இப்போதுதான் புரிகிறது - ராமதாஸ் கூறியது என்ன?

இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

Continues below advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பாமக வெற்றி பெறும். பாமகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், களப்பணியாற்றிய பாமக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுக்கும் நன்றி. கப்பியாம்புலியூரில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டிஎஸ்பி ஒருவர் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

காவல்துறையினர் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பாமக 25000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும். தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. இதற்கு முதல்வர் பொறுப்பேற்கவேண்டும்.

15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் பொறுப்பு என அறிவிக்கவேண்டும். இதற்கு காவல் அலுவலர்கள் பற்றாக்குறை நிரப்பப்படாமல் இருப்பதும் காரணம். இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமை அலுவலர் வரை 1.10 காவல்துறையினர்தான் உள்ளனர்.

40 ஆயிரம் காவல் பணியிடங்களை நிரப்பவேண்டும். 1 லட்சம் மக்களுக்கு 200 காவலர்களை நியமிக்கவேண்டும். டிஎன்பிஎஸ் சிக்கு புதிய தலைவரை நியமித்து இழந்த நம்பிக்கையை மீட்கவேண்டும். தலைவர் இல்லாமல் 25 ஆண்டுகள் செயல்படுவது நிர்வாக கோளாறு ஆகும். தற்போது 9 உறுப்பினர்கள் உள்ளனர். பொறுப்பு தலைவர் முனியநாதன் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்.

எனவே புதிய தலைவரையும், காலியாக உள்ள 7 உறுப்பினர்களை நியமிக்கவேண்டும். மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், இதனை திமுக தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளகுறிச்சி, மதுரை சிங்காநல்லூர் கொலைகளுக்கு மதுதான் காரணம்.

மறைமலை அடிகளாரின் 148வது பிறந்தநாள் ஜூலை 15ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயரை தமிழில் எழுத கட்டாயப்படுத்தவேண்டும். இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கும் அரசு. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பணியை சரியாக செய்யாமல் இருக்கும் அதிகாரியை ஓராண்டுக்கு பணி நீக்கம் செய்யவேண்டும்.

தமிழகத்தில் உளவுத்துறை எங்கே உள்ளது?. காலை உளவுத்துறையின் தலைவர் முதல்வரிடம் நிகழ்வை விவரிப்பார். தற்போது இதை யாரிடம் சொல்வது என்று அதன் தலைவருக்கு புரியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola