மாஞ்சோலை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் - பிபிடிசி அறிவிப்பு


”நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பாக தீர்வு ஒப்பந்தத்தில் (MOS) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது” - பிபிடிசி


மேலும், தற்போதைய நிலையை தொடரவும், சம்பந்தப்பட்ட எஸ்டேட்டில் இருந்து தொழிலாளர்களை கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பாக தீர்வு ஒப்பந்தத்தில் (MOS) குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது அத்தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


CM Stalin: போடு வெடிய..! கிராமங்களிலும் “மக்களுடன் முதல்வர் திட்டம்” - தருமபுரியில் தொடங்கி வைத்த ஸ்டாலின் CM Stalin:


ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வன் திட்டத்தினை, முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தார்.


ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே, பொதுமக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த திட்டம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், அந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


டாப் பொறியியல் கல்லூரியில் சீட் - தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சேலம் மாணவிகள்


தேசிய தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேர்வாகி சேலம் மலைவாழ் பழங்குடியின மாணவி மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் முதலிடம் பிடித்து விசைத்தறித் தொழிலாளியின் மகள் என சேலம் மாணவிகள் சாதனை.


மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சேலத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி சுகன்யா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.


இதேபோன்று, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மதிப்பெண் தரவரிசைப் பட்டியிலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளியின் மகள் ராவணி மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


தென்காசி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!!!


”இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை சுட்டிக் காட்டும்  திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி கொடுப்பார்”


இத்திருவிழா இன்று காலை சரியாக   5.00    மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோமதி அம்மன் காலையில் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். வரும்  19 ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா  வரும் 21ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.


அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டை ஓபிஎஸ்; டிடிவி இல்லாவிட்டால் ஓபிஎஸ் இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டையான ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ் கட்சித் தொண்டர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துள்ளார்.