தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை:
தமிழ்நாட்டிற்கு நாளை முதல் வரும் 31 ஆம் தேதிவரை, தினமும் 1 டி.எம்.சி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. அதுவும் திறக்கப்படும் காவிரி நீரில், வினாடிக்கு 11, 500 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, கர்நாடக அணைகளில் நீர்வரத்து சீராக உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு நீரை திறக்க வேண்டும். தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் 1 டி.எம்.சி நீரை திறக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் , நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக தரப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
பகிர்ந்தளிக்கப்படும் காவிரி நீர்:
இந்நிலையில், நாள்தோறும் , 1 டி.எம்.சி நீரை திறக்க வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காவிரி நீர் பங்கீடு விவகாரமானது, பல ஆண்டுகளாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பாசனம் மற்றும் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே, காவிரி நீரானது பங்கீடு செய்யப்படுகிறது.
காவிரி உரிமை மீட்பு குழு:
காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் சில நாட்களுக்கு தெரிவித்ததாவது, கர்நாடகத்தில் பருவமழை நன்றாக பெய்து தண்ணீர் அங்குள்ள அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் விகிதப்படி நமக்கு உள்ள தண்ணீரை தமிழக அரசு கர்நாடக அரசிடம் கேட்டு பெற வேண்டும். விகிதப்படி முழு அளவு இருந்தால் என்ன கிடைக்குமோ அதுவல்ல. பகுதி அளவு இருந்தால் கூட அதுக்குள்ள விகிதப்படி தண்ணீரை வாங்க வேண்டும்.
மேட்டூர் அணையை இந்த ஆண்டு பாசனத்துக்கு திறக்காததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து பேரிடர் நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.