ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கு வழங்கி உள்ளதாகவும் அந்தந்த பகுதியுள்ள சூழலுக்கு ஏற்ப காவல்துறை அனுமதி வழங்கப்படும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.


கடந்த அக்டோபர், 2 - ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து அரசு அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.


 இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக செப்டம்பர்,30- ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான செய்திகள், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அறிவுறுத்தினார்.


அதன்பின்னர் நவம்பர், 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்தும் படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டதுடன், அதற்கு காவல்துறை அனுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


வழக்கை அக்டோபர்,31ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்..


இந்த நிலையில் காவல்துறை தலைமை இயக்குனர் டி,ஜி.பி. சைலேந்திரபாபு அவர்கள் தமிழகத்தில் அந்தந்த பகுதியில் உள்ள சூழலுக்கு ஏற்ப அனுமதி வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.




மேலும் வாசிக்க..


Two Finger Test: “பாலியல் வன்கொடுமை... இரு விரல் பரிசோதனை ஆணாதிக்கமானது” - உச்ச நீதிமன்றம் அதிரடி