கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 




கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டில் உள்ள பசுபதிபுரம், நல்லதங்காள் ஓடை உள்ளிட்ட திரைக்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக வார்டு கவுன்சிலரை அணுகி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.




இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சன்னத் தண்ணீர் கூட இல்லாததால் குடிநீருக்கு சிரமப்படுவதாக கூறி அந்த தெருக்களில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மேற்கு பிரதட்சணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் தண்ணீர் திறந்து விடச் சொல்லுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையங்களுக்கு அருகில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண