தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை 11 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


24.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


25.04.2023 மற்றும் 26.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


27.04.2023 மற்றும் 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


Dscl கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), PWD மக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 9, கிண்ணக்கொரை (நீலகிரி), பொன்னனியாறு அணை (திருச்சி), கெட்டி (நீலகிரி) தலா 8, காட்டுமயிலூர் (கடலூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 7, செங்கம் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை) 6, நத்தம் (திண்டுக்கல்), மஞ்சளாறு (தேனி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 6, வேப்பூர் (கடலூர்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மூலனூர் (திருப்பூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), கள்ளக்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 5,  செம்மேடு (விழுப்புரம்), பாலவிதிதி (கரூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), தொண்டி (ராமநாதபுரம்), கடவூர் (கரூர்), விராலிமலை (புதுக்கோட்டை), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), மதுரை தெற்கு (மதுரை), கோவில்பட்டி (திருச்சி), அரவக்குறிச்சி (கரூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), பெரியகுளம் (தேனி), தல்லாகுளம் (மதுரை), பெரியகுளம் AWS (தேனி), விருதுநகர் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை. என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.