மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் நேற்று மீனாட்சி-சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் யாரும் வைகை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர்,”வைகை ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் வைகை ஆற்று கரை ஓரங்களில் நின்று மக்கள் யாரும் நாளை சாமி தரிசனம் செய்ய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்