செப்டம்பர் 7 "சந்திர கிரகணம்" "பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்!

Continues below advertisement


 அன்பான வாசகர்களே செப்டம்பர் 7 இரவில் சந்திர கிரகணம் ஆரம்பிக்கிறது பொதுவாக கிரகணத்தின் போது கோவில்களின் கதவுகள் மூடப்படும் என்ற ஐதீகம் உண்டு... அந்த அளவுக்கு தீயசத்துகளின் நடமாட்டம் பூமியில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது தோஷமுள்ள ஜாதகங்கள் இந்த சந்திர கிரகண நேரத்தின் போது பரிகாரங்கள் செய்தால் நிச்சயமாக உங்களுடைய தோஷங்கள் விலகும்...



 மேஷ ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 அருகில் இருக்கின்ற முருகன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கின்ற சர்பங்களுக்கு சாந்தி செய்யுங்கள்...



 ரிஷப ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கின்ற சர்பங்களுக்கு சாந்தி செய்யுங்கள்...


 


 மிதுன ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 பெருமாள் கோவிலில் இருக்கக்கூடிய மரத்தடி சர்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 கடக ராசி செய்ய வேண்டிய பரிகாரம் :


 பராசக்தி பார்வதி தேவியின் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 சிம்ம ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 சிவன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 கன்னி ராசி செய்ய வேண்டிய பரிகாரம் :


 லட்சுமி நரசிம்மர் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் சர்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 துலாம் ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...


 


 விருச்சக ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 சுப்பிரமணிய சுவாமி இருக்க கூடிய கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் சர்ப்பங்களுக்கு சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும்...



 தனுசு ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 தக்ஷிணாமூர்த்தி இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 மகர ராசி செய்ய வேண்டிய பரிகாரம்:


 சனீஸ்வர பகவான் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று அங்கு இருக்கின்ற சர்ப்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 கும்ப ராசி செய்ய வேண்டிய பரிகாரம் :


 ராகு கேது கோவிலுக்கு சென்று அங்க இருக்க கூடிய சர்பங்களுக்கு சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும்....



 மீன ராசி செய்ய வேண்டிய பரிகாரம் :


 நவகிரக கோவிலுக்கு சென்று அங்கிருக்க கூடிய சர்பங்களுக்கு சாந்தி செய்ய வேண்டும்...



 இப்படியாக 12 ராசிக்காரர்கள் கிரகண தினத்தன்று திறக்கப்பட்ட கோவிலில் ராகு கேதுக்களாக பின்னப்பட்ட பாம்புகளாக சர்ப்பங்களின் விக்கிரகங்கள் வைக்கப்பட்டு இருக்கும்... அந்த தெய்வங்களுக்கு எலுமிச்சம் பழத்தை காணிக்கையாகவோ... தேங்காய் உடைத்தோ... கற்பூரம் ஏற்றியோ... படையில் வைத்து 9 முறை எதிர்திசையில் சுற்றிவர வேண்டும்... வழக்கமாக கடிகாரமுள் சுற்றுவது போல தான் நாம் வலம் இருந்து இடம் சுற்றி வருவோம்.. ஆனால் ராகு கேதுக்கள் எதிர்மறாக இடமிருந்து வலம் சுற்றி வரும் அதேபோல நீங்களும் இடமிருந்து வளம் ஒன்பது முறை சுற்றி வாருங்கள் அப்படி வரும்பொழுது உங்களுடைய கோரிக்கைகளை ராகு கேதுக்களிடம் சமர்ப்பித்து விடுங்கள்.....


 உங்களுக்கான விடியல் தரப்போவது சர்ப்பங்கள் தான் காரணம் ராகு அல்லது கேதுக்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செல்வங்களையும் வீட்டு நன்மைகளையும் கொடுக்க முடியும் அப்படிப்பட்ட ராகு கேதுக்களுக்கு நீங்கள் எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாக வணங்கி மனதார முன்னோர்களை நினைத்து உங்களுடைய பூர்வீக முன்னோர்களும் உங்களுக்கு என்றென்றும் ஆசீர்வாதத்தை அருளுவார்கள்.... சந்திரனுடன் ராகு சேர்வதும் சூரியனுடன் கேது சேர்வதும் உங்களின் பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வாக வரப்போகிறது இந்த சந்திர கிரகண நிகழ்வை பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்...