கரூர் நகரப் பகுதியான எல்ஜி பி நகர் பகுதியில் குடிகொண்டு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் விநாயகருக்கு என்னைக்காப்பு சாட்சி பால் தயிர் பஞ்சாமிர்தம் தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சல் மஞ்சள் சந்தனம் திருமஞ்சல் அபிஷேக பொடி பன்னீர் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து வெள்ளி கிரீடம் சாத்தப்பட்டு மூலவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபம் காட்டினார். அதை தொடர்ந்து உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


 




ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் அழகன் முருகனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை.


அழகன் பாலமுருகனுக்கு பங்குனி மாத கிருத்திகை


கரூர் நகரப் பகுதியான தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் பாலமுருகனுக்கு பங்குனி மாத கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேர், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து சந்தன காப்பு, அலங்காரத்தில் அழகன் முருகனை காட்சியளிக்க செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறி தூப தீபங்கள் காட்டி, தொடர்ச்சியாக மகா தீபாராதனை காட்டப்பட்டது. தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத கிருத்திகை பூஜையைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.


 







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.