தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் இந்த நிதிநிலை அறிக்கையில் தாக்கல் செய்யபட்டது. இந்த திட்டம் உலகெங்கும் இருக்ககூடிய பொருளாதார வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என தெரிவித்தார். 


மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கு காரணம் குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். 


 “பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம். நூற்றாண்டின் மகத்தான திட்டம் மகளிர் உரிமைத்தொகை திட்டம். நீதிக்கட்சி ஆட்சி முதலே பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆணின் உழைப்பிற்கு எந்த வகையிலும் பெண்கள் குறைந்தவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பேற்றது முதல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தேர்தல் அறிக்கையில் இல்லாதவற்றையும் செயல்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.


மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2 நோக்கங்களை கொண்டது. முதல் நோக்கம் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது, 2வது நோக்கம் வாழ்க்கை தரத்தை உயர்த்துவர்து என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.