Palladam Crime: பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை: போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நபருக்கு கால் முறிவு..

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

தமிழகத்தையே உலுக்கிய கொலை சம்பவம்

தமிழகத்தையே உலுக்கி உள்ளது திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடந்த படுகொலைகள் சம்பவம். அங்குள்ள கள்ளக்கிணறு கிராமத்தில்   ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் அரிவாளால் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவர் தவிடு, புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார்.இவரது வீட்டின் அருகேயுள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பவம் நடந்த தினத்தன்று 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்தியுள்ளனர். 

இதனை செந்தில் குமார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த சித்தப்பா மகன் மோகன்ராஜ் அங்கு ஓடி வந்துள்ளார். செந்தில் குமாரை காப்பாற்ற முயன்ற நிலையில், மோகன்ராஜையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சத்தம் கேட்டு, மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி, மற்றும் அவரின் அக்கா ரத்தினாம்பாள் இருவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

தங்கள் மகன்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினர். ஆனால் அந்த கும்பல் பெண்கள் என்றும் பாராமல் இவர்கள் இருவரையும் வெட்டி கொன்றது. இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

கைது செய்யப்பட்டவருக்கு கால் முறிவு 

இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலைகள் நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகினது. மேலும் கொலையாளிகளை கைது செய்யாதவரை உடல்களை வாங்க மாட்டோம் என இறந்தவர்களின் உறவினர்கள், ஊர் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பல்லடத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இப்படியான நிலையில்  பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறி போலீசாரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க: தாயின் காதலனை போட்டு தள்ளிய மகன்..! பலமுறை கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம்!

Continues below advertisement