தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வந்த மழை கடந்த சனிக்கிழமை இரவு மிகவும் தீவிரமாக பெய்தது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்வதால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்து.




இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் சனிக்கிழமை இரவு முதல்  கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், நேற்று இரவும் மழை அவ்வப்போது விடாமல் பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து, இன்று காலை முதலும் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்கனவே மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்புவாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு நேற்று முன்தினம் ஒரே இரவில் மழை கொட்டித்தீர்த்தால் அவதிப்பட்டு வரும் மக்கள், இந்த ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையால் மிகுந்த வேதனை அடைந்துள்ளர். 


புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை இன்று பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பாதிப்பு உள்ளதால் இன்று சுமார் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.




தென்கிழக்கு வங்க்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 9-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதுமேலும், வலுப்பெற்று வட தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


Tamil Nadu rains: : கனமழையால் சில மாவட்டங்களில் ஸ்கூல், காலேஜ் லீவ்..! எந்தெந்த மாவட்டங்கள்.?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண