வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருப்பதன் எதிரொலியாக சென்னையில் நேற்றிலிருந்து கனமழை கொட்டிவருகிறது. தற்போது விட்டு விட்டு மழை பெய்தாலும் 10 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் தலைநகரம் தத்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிறது.


மக்கள் அனைவரும் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், சென்னையில் கனமழை தொடரும் எனவும், 10 ,11ஆம் தேதிகளில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், 2015ஆம் ஆண்டு திரும்பிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். 


இதற்கிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்தார். 


இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மழையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பேசி தெரிந்துகொண்டேன். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையு மத்திய அரசு தேவையான உதவிகளைசெய்யும். மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


 






ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் மழை பாதிப்பு குறித்து கண்காணித்துவரும் சுழலில் பிரதமர் - முதலமைச்சரின் இந்த தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உயர் வெள்ள அபாய எச்சரிக்கை... இது லேட்டஸ்ட் அப்டேட்!