அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், எங்களால் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. ஓபிஎஸ் உடன் சேர்ந்து செயல்பட முடியாது என்று ஈபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதமிடப்பட்டது. 


தொடர்ந்து, இணைந்து செயல்பட்டால் அதிமுகவில் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும் எனவும், கூட்டம் நடத்தக்கூடாது என ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என்ற உத்தரவு விபரீதமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.