கரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் புரோக்கர்களின் பிடியில் சிக்கி உள்ளன. இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகரில் மாநகராட்சி அலுவலகம் அருகே மேல கரூர் சார்பதிவாளர் அலுவலகம் கரூர் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் -2 அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்து பகுதிகளில் இருந்து சொத்துக்கள் வாங்கல் விற்பனை செய்ய பத்திரப்பதிவு பணிக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர்.





சமீபகாலமாக இந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் பத்திரப்பதிவு செய்ய முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில் கமிஷன் கொடுத்தால் தான், பத்திரப்பதிவு செய்வார்கள் எனக்கூறி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். புரோக்கர்கள் நடமாட்டம் குறித்து திருச்சி மாவட்டம், பதிவுத்துறை துணைத் தலைவர் கரூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது, கரூரில் உள்ள இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் முத்திரைத்தாள் கட்டணத்துக்கு ஏற்ற வகையில், கமிஷன் கொடுத்தால் மட்டுமே பத்திரி பதிவு செய்யப்படுகிறது. இல்லை என்றால் 'சர்வர்' கோளாறு எனக்கூறி, பத்திரப்பதிவை தள்ளிப் போடுகின்றனர்.




பத்திரப்பதிவு செய்ய டோக்கன் பெறுவதற்கு கூட கமிஷன் கொடுத்தால் தான் கிடைக்கிறது. ஆவண எழுத்தர்கள் எனக் கூறிக்கொண்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள்தான் நாள்தோறும் நடக்கும் பத்திர பதிவை நிர்ணயம் செய்கின்றனர். ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும், சார் பதிவாளர் முதல் அலுவலக ஊழியர்கள் பணம் தரவேண்டும் என, ஒரு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கேட்கின்றனர்.




இதனால் ஆவண எழுத்தார்களுக்கான தொகையை பத்திரப்பதிவுத்துறை மூலம், தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஆவண எழுத்தர்கள் அல்லாத சார்பதிவாளர்கள் அலுவலக ஊழியர்கள் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடமாடும் புரோக்கர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை நடித்து, அரசு அலுவலர்கள் புரோக்கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண