இறப்பதற்கு முன்பு, நான் உட்பட 3 அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தோம் - ஓ.பி.எஸ் வாக்குமூலம்
Arumugasamy Commission OPS: நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.

நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் (Jayalalithaa Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) நேற்று ஆஜரானார். நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.
இன்று காலை முதல் நடைபெற்று வரும் விசாரணையில், 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு ஓபிஎஸ் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்ததாக தெரிவித்திருக்கிறார். ஜெயலைத்தாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது குறித்த தகவலை அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாக ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அப்போதைய ஆளுநர் அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்து பேசியது தனக்கு நினைவில்லை என்றும் டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு சிபிஆர் சிகிச்சை செய்ததும் தனக்கு தெரியாது என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், விசாரணயின்போது ஓபிஎஸ்ஸிடம் மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, மருத்துவர்கள் உடன் இருக்கவேண்டும் என அப்போலோ மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓபிஎஸ்ஸிடம் சசிகலா(Sasikala) தரப்பு குறுக்கு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்