Arumugasamy Commission Enquiry LIVE: ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாள் விசாரணை நிறைவு..!

Arumugasamy Commission Enquiry LIVE Updates: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalitha Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தொடர்பான முக்கியச் செய்திகள்

ABP NADU Last Updated: 22 Mar 2022 04:57 PM
ஓ.பன்னீர்செல்வத்திடம் 2வது நாள் விசாரணை நிறைவு..!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் இரண்டாவது நாள் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். 

Arumugasamy Commission OPS LIVE: ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை - ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ எந்தவித சதித்திட்டமும் தீட்டவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார். 

Arumugasamy Commission OPS LIVE: ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிகலா தரப்பு மீண்டும் குறுக்கு விசாரணை

உணவு இடைவேளைக்கு பின் ஆறுமுகசாமி ஆணையத்தில் நடைபெற்று வரும் விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிகலா தரப்பு மீண்டும் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர். 

Arumugasamy Commission OPS LIVE: சசிகலா மீது இன்றுவரை தனிப்பட்ட மரியாதை, அபிமானமும் உள்ளது - ஓ.பி.எஸ்

ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. சசிகலா(Sasikala) மீது இன்றுவரை தனிப்பட்ட மரியாதை, அபிமானமும் உள்ளது - ஓ.பி.எஸ்

Arumugasamy Commission OPS LIVE: ஓ.பி.எஸ்ஸிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்திவருகிறது.

ஓ.பி.எஸ்ஸிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்திவருகிறது.

Arumugasamy Commission Enquiry LIVE: 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது - ஓ.பி.எஸ்

2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 4-ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது - ஓ.பி.எஸ்

Arumugasamy Commission Enquiry LIVE: டிசம்பர் 5-ஆம் தேதி, நான் உட்பட மூன்று பேர், இறப்பதற்கு முன்பாக அவரை நேரில் பார்த்தோம் - ஓ.பி.எஸ்

டிசம்பர் 5-ஆம் தேதி, நான் உட்பட மூன்று பேர், இறப்பதற்கு முன்பாக அவரை நேரில் பார்த்தோம் - ஓ.பி.எஸ்

Arumugasamy Commission OPS LIVE: ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் நேரில் பார்த்தேன் - ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு நான் நேரில் பார்த்தேன் - ஓ.பன்னீர்செல்வம். அப்போதைய ஆளுநர், அப்போலோ பிரதாப் ரெட்டியை சந்தித்தது குறித்து மட்டும் எனக்கு நினைவில்லை - ஓ.பி.எஸ்

Arumugasamy Commission OPS LIVE: ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாக நான் நேரில் பார்த்தேன் - ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாக நான் நேரில் பார்த்தேன் - ஓ.பன்னீர்செல்வம்

மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்க அப்போலோ எதிர்ப்பு..

 மருத்துவம் சார்ந்த கேள்விகளை கேட்கும்போது, மருத்துவர்கள் உடன் இருக்கவேண்டும் - அப்போலோ எதிர்ப்பு..

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் ஓரிரு முறை தெரிவித்தார் - ஓ.பி.எஸ்

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் ஓரிரு முறை தெரிவித்தார் - ஓ.பி.எஸ்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது - ஓ.பி.எஸ்

ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது - ஓ.பி.எஸ்

இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் - ஓ.பி.எஸ்

இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் - ஓ.பி.எஸ். 

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்ல தடையாக இருந்தது எது ? - வாக்குமூலம் கொடுத்த ஓபிஎஸ்!

ஆணையத்தில் ஆஜரான ராம்மோகன் ராவ் வெளிநாடு அழைத்து செல்வது குறித்து அமைச்சரவையை கூட்ட சொன்னதாகவும்,  4 நாட்கள் பரபரப்பாக பேசி பின்னர் அமைதியாக இருந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி ஆணையம் கேள்வி எழுப்பியது . அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் ராம் மோகன் ராவ் அது தொடர்பாக தன்னிடம் எதுவும் பேசவில்லை எனவும், அவ்வாறு கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் எனவும் பதிலளித்துள்ளார்.

நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.

நேற்று முதல் நாளில்  3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.

ஜெயலலிதா மரண வழக்கு விசாரணையில் இரண்டாவது நாளாக ஓபிஎஸ் ஆஜர்

 ஜெயலலிதா மரண வழக்கு விசாரணையில் இரண்டாவது நாளாக ஓபிஎஸ் ஆஜர்

விஜயபாஸ்கர்தான் சொன்னார்.. சமாளித்த ஓபிஎஸ்

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மூலமாகவே தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். காவேரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது, அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்திருக்கிறார் ஓபிஎஸ் 

கண்ணாடி வழியாக மட்டுமே ஜெயலலிதாவை பார்த்தேன் - இளவரசி

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்ததாக சசிகலா அண்ணன் மனைவி இளவரசி விசாரணையில் தெரிவித்துள்ளார் 

ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை குறித்து ஓபிஎஸ்

பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது, விசாரணையில் ஓபிஎஸ் வாக்குமூலம் 

“என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன என எனக்கு தெரியாது” - ஓபிஎஸ் வாக்குமூலம்

2016 செப்டம்பர் 22ஆம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தனக்கு தெரியாது எனவும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எதுவும் தெரியாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரமும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். 

Background

நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்(Jayalalitha Death) குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்(O Panneerselvam) நேற்று ஆஜரானார். அப்பொழுது, அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியது. 


அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிக்களை அகற்றுமாறு கூறவில்லை. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானதே என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்தார்


ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு(OPS) சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு நேற்று நேரில் ஆஜரானார் 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.