சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீடியோ வைரலானது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு பல துறைகளில் சிறந்து விளங்குகிறது எனவும், குறிப்பாக குஜராத்தைவிட தமிழ்நாடு முன்னிலை பெற்றிருக்கிறது எனவும் கருத்து தெரிவித்திருந்தார். 


இது குறித்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் பள்ளிக்கு போகாத 15 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளே இல்லை. ஆனால், குஜராத்தில் 15 முதல் 20 சதவிகிதம் பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது. இந்நிலையில், பிடிஆர் தெரிவித்திருக்கும் கருத்து பொய்யானது” என ட்விட்டர் வாசி ஒருவர் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறார். 


அதில், தனியார் பத்திரிக்கைச் செய்தி ஒன்றை குறிப்பிட்டிருக்கும் யுவராஜ் ராமலிங்கம் என்பவர், பள்ளிக்குச் செல்லும் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண்களில் தமிழ்நாட்டில் 98.4% பேரும், குஜராத்தில் 91.7% பேரும் உள்ளனர் என குறிப்பிட்டிருக்கிறார். எனவே, பிடிஆர் சொல்வது பொய் என தெரிவித்திருந்தார். 






இதற்கு பதில் தெரிவித்திருக்கும் பிடிஆர், அந்த நபர் சுட்டிக்காட்டிருக்கும் தரவுகள் பழையது எனவும் தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இத்தகைய பழைய தரவுகளை எடுத்துக்கொண்டு சுட்டி காட்டுகின்றனர் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த நபரை “வடிகட்டிய முட்டாள்” என குறிப்பிட்டிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே ட்விட்டரில் ட்வீட் வாக்குவாதம் நடைபெற்றது. 






பிடிஆர் பதிலுக்கு மீண்டும் பதிலடி தந்திருக்கும் அந்த நபர், தரவுகள் கூடிய புகைப்படத்துடன் இரண்டு கேள்விகளை முன்வைத்திருக்கிறார். அதில், “கேள்வி 1 - கடைசி Official Literacy Data  2011 Census கூட ரிலீஸ் ஆச்சுஅந்த Data படி SC/ST  மக்கள், SC/ST பெண்கள் Literacy Rate குஜராத் தமிழகத்தை விட Leading தமிழகம் ST Literacy rateல Worst Performing  State ஏன்? இது கேள்வி 2” என பதிவிட்டிருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண