நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று ஆஜரானார்.
நேற்று முதல் நாளில் 3 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஓ.பி.எஸ்ஸிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று ஆஜரான ஓபிஎஸ், திருபரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி பேரவை இடைத்தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தெரியும் என தெரிவித்துள்ளார். மேலும் அப்போலோ மருத்துவமனைய்ல் இருந்தபோது ஜெயலலிதா நன்றாக இருப்பதாக ஒரு சில முறை சசிகலா என்னிடம் தெரிவித்ததாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்