தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
”தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு எவராலும் தமிழ்நாட்டை ஆள முடியாது.” என முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று பள்ளிக் கல்வி துறை மற்றும் உயர்க் கல்வி துறை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது, முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அதிமுக ஆட்சியின்போது, செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, உரையின் இறுதியில், ”தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளும். வேறு அவராலும் ஆள முடியாது.” என்று பேசி உரையை முடித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்த கருத்திற்கு அதிமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பிகள் மேஜையைத் தட்டி தங்களின் வரவேற்ப்பை தெரிவித்தனர்.
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்:
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில் CUET தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றினார்
கலை பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
நலிவுற்ற கலைஞர்களின் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. செவ்வியல் கலை வடிவங்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும். நாட்டார் கலை வடிவங்களை நம்ம ஊர் திருவிழா என்ற பெயரில் சென்னையில் காட்சிப்படுத்தி உள்ளோம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
க்யூட் தேர்வை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: அதிமுக ஆதரவு
உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் பேசும்போது, ''க்யூட் தேர்வால் மாணவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். எதிர்காலத்தில் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்படும். இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்'' என்று கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்