ஆன்மீக நகரமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறத்தில் சிவனே மலையாக வீற்றிருக்கும் மலை அங்கு அடர்ந்த காடுகளையும் மலைப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் சுமார் 10,000 ஹெக்டேர் காப்பு காட்டுகள் உள்ளது. இந்த காப்பு காடுகளில் குரங்குகள்,லங்கோரி வகை குரங்குகள் , மான்கள், காட்டு பன்றிகள் , எரும்பு தின்னி உள்ளிட்ட வனவிலங்குகளும், பாதுகாக்கப்பட கூடிய தேசிய பறவைகள் மயில், குயில், புறா உள்ளிட்ட பறவைகளின் இருப்பிடமாக திகழ்கிறது.
திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் மாதந்தோறும் சித்ரா பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் ஊரடங்கு போடப்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெறிச்சோடிய மலை அடிவாரத்தில் மான்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. இதனை காண ஏராளமானோர் அங்கு வந்து குவிகின்றனர். செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
மலையில் ஆயிரக்கணக்கான மான்கள் வசிக்கின்றனர். சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக தேவையான தண்ணீர் அங்கேயே கிடைத்து விடுகிறது. அதுமட்டும் மின்றி தொடர் மழையால் மலையில் இருந்த செடி ,கொடி ,மரங்கள் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாகன போக்குவரத்து முடங்கி இருப்பதால் அமைதியான சூழல் ஏற்பட்டு உள்ளதால். கிரிவலப்பாதையில் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் ஆயிரக்கணக்கான மான்கள் அச்சமின்றி மலையில் இருந்து கூட்ட கூட்டமாக கீழே இறங்கி மலை அடிவார பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது. போக்கு வரத்து நேரத்தில், எப்போதாவது தான் மான்கள் அங்கும் இங்குமாக நடமாடி வரும். குறிப்பாக இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்த பிறகு மான்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். தற்போது எந்த விதமான அச்சமின்றி மான்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றது. இந்நிலையில் கிரிவலப்பாதை முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்போடு மான்கள் கம்பி வேலி அருகே துள்ளி குதித்து விளையாடி வருகிறது. அங்குவரும் மக்களுக்கு அது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
குடும்பம் குடும்பமாக வந்து துள்ளி குதித்து விளையாடும் மான்களை பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். மான்களுக்கு பழங்கள் உணவுகள் அளித்தும் அதுமட்டும் மின்றி இளைஞர்கள் தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இனி மான்களை பார்ப்பதற்காக மக்கள் இனிவரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, மான்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.