தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 






தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமாகிய மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர்  வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 1953ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிறந்த மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.


அதில் “ பல சர்ச்சைகள், காழ்ப்புணர்வு இவற்றையெல்லாம் கடந்து தனது உழைப்பால் வெற்றி பெற்றவர் தளபது மு.க.ஸ்டாலின். கலைஞர் சொன்னதுபோலே உழைப்பு உழைப்பு உழைப்பு என அமைதியான உழைப்பால் திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றிப்பாதையில் நடத்திச் செல்பவர். இன்று அவரது 70வது பிறந்தநாள், நாடு முழுவதும் இருக்கக்கூடிய பாசிசத்தை, தனது கொள்கையால் எதிர்த்து போர்த்தொடுத்து கொண்டிருப்பவரை நம்பிக்கையொடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


நேற்றைய தினம் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்றமிகு ஏழு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 



  1. சமூக நலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்குதல்

  2. திருநங்கைகளுக்கு மாதந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல்

  3. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்

  4. தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் தனியாருடன் ஒப்பந்தம்

  5. 44 மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

  6. காலை உணவுத் திட்டம் பல்வேறு இடங்களுக்கு விரிவாக்கம் செய்யும் விழா

  7. பேராசியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.