Omni Bus Ticket: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து  தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ் டிக்கெட் விலை அறிவிப்பு:

பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.  பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், இதில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் மக்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து செல்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது.  அதிலும், தென் மாவட்டங்களுக்கு ஆம்னி  பேருந்துகளின் டிக்கெட் விலை உச்சத்தில் இருக்கும். இந்நிலையில் தான், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அதனால், தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்யணிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை பார்க்கலாம்.

புறப்படும் இடம் (சென்னை) குறைந்தபட்ச கட்டணம் அதிகபட்ச கட்டணம்
மதுரை 1,599 ரூபாய்  2,665 ரூபாய் 
தென்காசி 1,975 ரூபாய் 3,292 ரூபாய்
ராஜபாளையம் 1,756 ரூபாய் 2,926 ரூபாய்
திருச்செந்தூர் 2,006 ரூபாய் 3,344 ரூபாய்
தூத்துக்குடி 1,912 ரூபாய் 3,187 ரூபாய்
நெல்லை 1,959 ரூபாய் 3,266 ரூபாய்
விருதுநகர் 1,630 ரூபாய் 2,717 ரூபாய்
சிவகாசி 1,693 ரூபாய் 2,822 ரூபாய்
ஆலங்குளம் 2,006 ரூபாய் 3,344 ரூபாய்
சங்கரன்கோவில் 1,850 ரூபாய் 3,083 ரூபாய்
மார்தாண்டம் 2,289 ரூபாய் 3,814 ரூபாய்
நாகர்கோவில் 2,210 ரூபாய் 3,684 ரூபாய்
குலசேகரபட்டினம்  2,069 ரூபாய் 3,449 ரூபாய்
உடன்குடி  2,100 ரூபாய் 3,501 ரூபாய்
திசையன்விலை 2,163 ரூபாய் 3,605 ரூபாய்
பாபநாசம் 2,257  ரூபாய் 3,762 ரூபாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் 1,724 ரூபாய் 2,874 ரூபாய்
ராமேஸ்வரம் 2,006 ரூபாய் 3,344 ரூபாய்
கோவில்பட்டி 1,787 ரூபாய் 2,975 ரூபாய்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் தீபாவளிக்கு மேற்கண்ட கட்டணங்கள் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் விலை எவ்வளவு?

மேலும், தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து ரயில் டிக்கெட் விலை எவ்வளவு என்பது பார்ப்போம். இதனை தெரிந்துக் கொண்டு உங்களின் விருப்பதிற்கேற்பு தேர்ந்தெடுத்து பயணிக்கலாம். அதன்படி, சென்னையில் இருந்து நெல்லைக்கு ஸ்லீப்பர் கோச் ரூ.365, 3ஏ ரூ.990, 2ஏ ரூ.1,410 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லைக்கு தற்போது வந்தே பாரத் ரயில் இருக்கிறது. சென்னை டூ நெல்லைக்கான வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை ரூ.1600 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்லீப்பர் கோச் ரூ.430, 2ஏ ரூ.1,595, 3ஏ 1,130 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

Omni Bus Ticket: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? ஆம்னி பஸ் டிக்கெட் விலை இதுதான்...மக்களுக்கு ஷாக்!