Omni Bus Ticket: போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைக்கு பின் ஆம்னி பேருந்து சங்கம் டிக்கெட் விலையை அறிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகள்:

பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.  பண்டிகை காலங்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படுகிறது. ஆனால், இதில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் மக்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து செல்கின்றனர். இந்த சமயத்தில் ஆம்னி பேருந்துகள் மக்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் கடந்த வாரம் தமிழக அரசு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தது.

இதனால், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் ஸ்டிரைக் நடத்தினர். இதன்பிறகு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் பல கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனிடையே, தீபாளவி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இன்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், கடந்த செப்டம்பர் 2022 சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட ஐந்து சதவீதம் குறைவாக வசூலிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, கட்டணம் விவரம் வெளியிடப்பட்டது.  அதன்படி,  சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு குறைந்தபட்சம் 1,724 ரூபாயும், அதிகபட்சமாக,  2,874 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

டிக்கெட் விலை எவ்வளவு?

 

புறப்படும் இடம் (சென்னை) குறைந்தபட்ச கட்டணம் அதிகபட்ச கட்டணம்
தஞ்சை 1,097 ரூபாய்  1,829 ரூபாய்   
கோவை 1,724 ரூபாய் 2,874 ரூபாய்
மதுரை 1,599 ரூபாய்  2,665 ரூபாய் 
நாகப்பட்டினம்  972 ரூபாய்   1,620 ரூபாய் 
நாகர்கோவில் 2,210  ரூபாய் 3,684 ரூபாய்
சிதம்பரம் 690 ரூபாய் 1,150 ரூபாய்
பாண்டிச்சேரி 502 ரூபாய் 836 ரூபாய்
திருச்சி 1,066 ரூபாய் 1,777 ரூபாய்
தென்காசி 1,975 ரூபாய் 3,292 ரூபாய்
ராஜபாளையம் 1,756 ரூபாய் 2,926 ரூபாய்
சேலம் 1,097 ரூபாய் 1,829 ரூபாய்
திருச்செந்தூர் 2,006 ரூபாய் 3,344 ரூபாய்
தூத்துக்குடி 1,912 ரூபாய் 3,187 ரூபாய்
நெல்லை 1,959 ரூபாய் 3,266 ரூபாய்
தேனி 1,630 ரூபாய் 2,717 ரூபாய்
ஈரோடு 1,276 ரூபாய் 2,127 ரூபாய்
புதுக்கோட்டை 1,254 ரூபாய் 2,090 ரூபாய்
காரைக்குடி  1,317 ரூபாய் 2,195 ரூபாய்
திருப்பத்தூர் 1,348 ரூபாய் 2,247 ரூபாய்
சிவகங்கை 1,568 ரூபாய் 2,613 ரூபாய்
ராமேஸ்வரம் 2,006 ரூபாய் 3,344 ரூபாய்
விருதுநகர் 1,630 ரூபாய் 2,717 ரூபாய்
சிவகாசி 1,693 ரூபாய் 2,822 ரூபாய்
கடலூர் 564 ரூபாய் 961 ரூபாய்
திருவாரூர் 1,050 ரூபாய் 1,750 ரூபாய்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில் தீபாவளிக்கு மேற்கண்ட கட்டணங்கள் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க

Diwali Special Buses: நெருங்கும் தீபாவளி; பயணிகளே மொத்தம் 10, 975 சிறப்பு பேருந்துகள் - ஊருக்கு போக ரெடியாகுங்க