ஆம்னி பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் கடுமையாக விலையை உயர்த்தி கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், முன்னதாக அரசின் அனுமதியுடன் ஆம்னி பேருந்துகள் சங்கம் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்ட கட்டணமோ விமானக் கட்டணத்துக்கு இணையாக இருப்பதால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

புதிதாக உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் பின்வருமாறு:

சென்னை-கோவை: குறைத்தபட்சம் ரூ1,815 முதல் அதிகபட்சம் 3,025

சென்னை-மதுரை: குறைந்தபட்சம் ரூ1,776 முதல் அதிகபட்சம் 2,688

சென்னை-சேலம்: குறைந்தபட்சம் ரூ1,435 முதல் அதிகபட்சம் 2,109

சென்னை - பழனி குறைந்தபட்சம் ரூ1,650 முதல் அதிகபட்சம் 2,750 சென்னை - தென்காசி குறைந்த பட்சம் ரூ 2,079 முதல் அதிகபட்சம் 3,465

சென்னை - திருநெல்வேலி குறைந்த பட்சம் ரூ 2,063 முதல் அதிகபட்சம் 3,437 சென்னை - திருப்பூர் குறைந்த பட்சம் ரூ 1,667 முதல் அதிகபட்சம் 2,777

சென்னை - நாகப்பட்டினம் குறைந்த பட்சம் ரூ 1,271 முதல் அதிகபட்சம் 1,767

சென்னை - திருச்சி குறைந்த பட்சம் ரூ 1,394 முதல் அதிகபட்சம் 1,938

சென்னை - உடன்குடி குறைந்த பட்சம் ரூ 2,211 முதல் அதிகபட்சம் 3,630

சென்னை - திருச்செந்தூர் குறைந்த பட்சம் ரூ 2,112 முதல் அதிகபட்சம் 3,520

சென்னை -ஆறுமுகநேரி குறைந்த பட்சம் ரூ 2,079 முதல் அதிகபட்சம் 3,465 சென்னை-ஆத்தூர் குறைந்த பட்சம் ரூ.2063 முதல் அதிகபட்சம் 3,437

சென்னை -தூத்துக்குடி குறைந்த பட்சம் ரூ 2013 முதல் அதிகபட்சம் 3355 சென்னை -தென்காசி குறைந்த பட்சம் ரூ.2,079 முதல் அதிகபட்சம் 3,465 ரூபாயாகவும் உள்ளது.

முன்னதாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக, பேருந்து உரிமையாளர்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், துறைசார்ந்த பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்ட நிலையில், முன்னதாக விலை குறையும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.

 

ஆனால் விண்ணை முட்டும் அளவுக்கு தற்போது கட்டணம் உயர்ந்துள்ளதால், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை

Skytrax World Airline Awards 2022 : கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியல் ! முதலிடத்தை பிடித்த ‘கத்தார் ஏர்லைன்ஸ்’!