மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி குயின் என்ற வெப்சீரிஸ் வெளியானது. வெள்ளித்திரையில் ஆவணப்படுத்தும் விதமாக எல்.விஜய் இயக்கத்தில் தலைவி என்கிற பெயரில் கங்கனா நடிக்க ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது.
இந்தியில் ஜெயா என்கிற பெயரிலும் அத்திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு, அதற்கான டிரைய்லரும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் குயின், தலைவி, ஜெயா படங்களில் தங்கள் குடும்பத்தினரை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தடை விதிக்க தனி நீதிபதி மறுத்த நிலையில், வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது. அது குறித்து இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் தனி நீதிபதியின் அதே கருத்தை வலியுறுத்தினர். ஜெயலலிதாவின் வாழ்க்கையை நல்லமுறையில் தான் சித்தரித்துள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் விளக்கியதால் அதை ஏற்று, படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சக்தி சுகுமாற அமர்வு தீபாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.