சின்னக் கலைவாணர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில்,நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை நேற்று  போட்டுக்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், “கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்பு கொரோனா வரலாம். ஆனால், உயிரிழப்புகள் ஏற்படாது. அதனால், அச்சமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார் .


 



இந்நிலையில் அவர் இன்று படப்பிடிப்பில் தீடிரென நெஞ்சுவலி ஏற்பட்ட  தீவிர சிகிச்சைப் பிரிவில் சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் . மருத்துவர்கள் அவர் உடல் நிலையைப் பற்றி இன்னும் எந்தவிதமான தகவல்களையும் தெரியப்படுத்தவில்லை .