மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா லிமிடெட், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் 10-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு, செப்டம்பர் 28ஆம் தேதி, நிறுவனம் நெய்வேலியில் 10 மெகாவாட் சூரிய ஒளிமின்னழுத்த மின் நிலையத்தை இயக்குவதன் மூலம் தனது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயணத்தைத் தொடங்கியது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், என்எல்சி இந்தியா நிறுவனம் (என்.எல்.சி.ஐ.எல்) இந்தியாவின் எரிசக்தி நிலப்பரப்பை சீராக மாற்றி வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் புரட்சி:
இந்தியா "மெகாவாட்டிலிருந்து" ஜிகாவாட்டுக்கு மாறியதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி வலுவான மாற்றம் தேவை என்று 2015 ஆம் ஆண்டில் பிரதமர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, என்.எல்.சி இந்தியா நிறுவனம் 1 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்த நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனம் ஆனது.
பழுப்பு நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், 1380 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், 51 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இறங்கியுள்ளது.
என்.எல்.சி.ஐ.எல் நிறுவனம் 1234 கோடி யூனிட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம் 1 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விலை குறைந்த, நீடித்த மின்சாரத்தை வழங்கி லட்சக்கணக்கானோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள், 10,000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்திறனை எட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் புதிய துணை நிறுவனங்களை உருவாக்கியுள்ளது.
நாடே பார்த்து வியக்கும் என்எல்சி:
என்.எல்.சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்.ஐ.ஆர்.எல்) சொத்துக்களை பணமாக்குவதில் கவனம் செலுத்தும், என்.எல்.சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட் (என்.ஐ.ஜி.இ.எல்) தூய்மையான எரிசக்தி முயற்சிகளை முன்னெடுக்கும்.
மேலும், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் என்.எல்.சி.ஐ.எல் நிறுவனம் உறுப்பினராக இருப்பது நிலக்கரித் துறையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் வழிகாட்டுதலின் கீழ், என்.எல்.சி.ஐ.எல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது.
சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், எரிசக்தி சேமிப்பு அமைப்புகள், பசுமை ஹைட்ரஜன், நீரேற்று சேமிப்பு நீர்மின் திட்டங்கள், பழுப்பு நிலக்கரியிலிருந்து மெத்தனால் மாற்றம், சுரங்கத்திலிருந்து மணல் முன்முயற்சிகள் மற்றும் முக்கியமான கனிம ஆய்வு ஆகிய திட்டங்களை இது தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.