திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் இன்று (28 ஆம் தேதி ) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த முக்கூட்டத்திற்கு , திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தரம் வரவேற்புரையாற்றுகிறார்.




கூட்டணி கட்சிகள் பங்கேற்பு


காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் கி. வீரமணி, இரா. முத்தரசன், எம்.எச்.ஜவாஹிருல்லா பொன்.குமார் கருணாஸ், கு. செல்வப்பெருந்தகை, வைகோ, கே.எம்.காதர்மொய்தீன், ஈ.ஆர்.ஈஸ்வரன், எர்ணாவூர் நாராயணன், அதியமான், தொல். திருமாவளவன், தி.வேல்முருகன், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், கே. பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், ஜி.எம்.தர் வாண்டையார், தமீமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால் , திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது.


பிரம்மாண்ட மேடை


இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட பந்தலுக்குள் 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பவள விழா ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம். பூண்டுள்ளது. 20 கூட்டணி கட்சித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி இருப்பதால் , 250 அடி அகலமும் 500 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.


அண்ணா வாழ்ந்த இல்லம்


கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். அண்ணா வீட்டையே அரங்குக்கு கொண்டு வந்த அலங்காரம், திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகில் அண்ணா வாழ்ந்த நினைவு இல்லம் உள்ளது. இந்த, இல்லத்தின் முகப்பு அப்படியே தத்ரூபமாக மேடை அருகில் அண்ணா வாழ்ந்த இல்லம் என அமைக்கப்பட்டுள்ளது.




2000 போலீசார் பாதுகாப்பு 


 


இன்று முதலமைச்சர் வருகையை ஒட்டி அவ்வழியே செல்லும் வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் வருகை மற்றும் தமிழகத்தில் இருந்து , ஏராளமான பல்வேறு கட்சி தலைவர்கள் வருகையை ஒட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




திமுகவின் காஞ்சிபுரம் சென்டிமென்ட்


காஞ்சிபுரத்தில் முக்கிய நிகழ்வுகள் , முக்கியமான பொதுக்குழு கூட்டங்கள், நடத்துவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் செண்டிமெண்டாக உள்ளது. அண்ணா பிறந்த காஞ்சிபுரம் என்பதால்,   திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது தலைவராக உள்ள மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதனால்தான் காஞ்சிபுரத்தில் பவள விழாவை நடத்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் நீங்கள் நடைபெறும்  பவள விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் தெரிவித்த அறிவிப்புகள் வெளியாகுமா ? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.