தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதியான நித்தியானந்தா, பாலியல், நிதி மோசடி வழக்குகளில் சிக்குவதற்கு முன்னர் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆன்மிக நபராக விளங்கினார்.

Continues below advertisement

முன்னதாக, புளோரிடாவை தலைமை இடமாக் கொண்ட அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். நித்தியானந்தா 2012-ல், "மிகவும் ஆன்மீக செல்வாக்கு மிக்க 100 பேரில்" ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.

மதுரை ஆதீன மடாதிபதி

தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம், நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்தப் பதவியில் இருந்து சில மாதங்களிலேயே நீக்கப்பட்டார்.

Continues below advertisement

மகாமண்டலேஸ்வரர் ஆன நித்தியானந்தா

தொடர்ந்து 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மகாநிர்வாணி அகாராவால் நடத்தப்பட்ட விழாவில் நித்தியானந்தாவுக்கு மகாமண்டலேஸ்வரர் பட்டம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே நித்தியானந்தா தியான பீடத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்தார். இந்த தியான பீடம், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வந்தது. அந்த தியான பீடம் சார்பில், நித்தியானந்தா இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை படைத்தது உங்களுக்கு தெரியுமா?

என்ன உலக சாதனை?

2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் சீடர்கள் மிகப்பெரிய கயிறு மூலம் யோகா வகுப்பு (rope yod) நடத்தி சாதனை படைத்தனர். இதற்காக கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மல்லர் கம்பத்தை நடத்தி 2ஆவதாக கின்னஸ் சாதனை படைத்திருந்தார் நித்தியானந்தா. இதற்கான சான்றிதழ்களை கின்னஸ் குழுவே நேரடியாக நித்தியானந்தாவிடம் வழங்கியது.

அது என்ன மல்லர் கம்பம்?  (mallakhamba)

ஆதிகாலத்தில் மனிதர்கள் உணவுக்காகவும் உயிரைக் காத்துக் கொள்ளவும் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளைக் கைக்கொண்டனர். அந்த முறையில், அதன் நீட்சியாக மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது. நிகழ்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம், மல்லர் கம்பத்தின் வேறு வடிவமாகும்.

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களும் பெயர்போன நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாம்: Nithyananda: நித்தியானந்தா உயிர்த் தியாகம்? அடுத்தது என்ன? கைலாசா, ரூ.4 ஆயிரம் கோடி பணம் யாருக்கு?