New Year Safety : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்..போலீசாரின் தீவிர கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்


புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள். உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18,000 பேர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மேலும் படிக்க


New Year 2024: புதிய சாதனைகளுக்கும், அனுபவங்களுக்கும்.. முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து


“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


பக்தர்கள் மகிழ்ச்சி.. மதுரை அழகர் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களிலும் இனி நாள் முழுவதும் பிரசாதம்..


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தபிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, படிப்படியாக பல்வேறு கோயில்களிலும் தற்போது நாள் முழுவதும் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரை அழகர் கோயிலிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க


திருவண்ணாமலையில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா விநியோகம்


திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தையும் பள்ளி கல்விதுறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பொறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 9862 மாணவர்களுக்கும், 11769 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 21631 மாணவ, மாணவிகளுக்கு 10 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மிதிவண்டி வழங்கப்பட்டது.மேலும் படிக்க


Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 693 கன அடியில் இருந்து 600 கன அடியாக குறைவு..


தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 901 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 693 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 600 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க