மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருவோருக்கு இ-பதிவு கட்டாயம், பேருந்து பயண கட்டுப்பாடுகள் என கொரோனா தடுப்பு விதிமுறைகளை இறுக்கமாக்கியுள்ளது தமிழக அரசு.



  • அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்குவதற்கு அனுமதியில்லை.

  • பெரிய கடைகள், வணிக வளாகங்கள் ( ஷாப்பிங் மால்கள்) இயங்க அனுமதியில்லை.

  • மளிகை கடைகள், காய்கறி கடைகள், இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  • வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை

  • டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  • சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் உள்ள அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதியில்லை. பியூட்டி பார்லர், ஸ்பாக்கள், சலூன்கள் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை.

  • அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். உணவகங்களில் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.

  • விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலே உணவு வழங்க வேண்டும். உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.

  • அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

  • அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை. இருப்பினும் தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்ததனைகள், சடங்குகளை வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்த தடையில்லை.

  • குடமுழுக்க விழாவை 50 நபர்களுடன் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

  • புதியதாக குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதியில்லை.

  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

  • இறுதி ஊர்வலங்களில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.

  • ஐ.டி. நிறுவனங்களின் 50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

  • கோல்ப், டென்னிஸ் கிளப் உள்பட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் செயல்பட அனுமதியில்லை.

  • சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகள் மடடுமே அனுமதி அளிக்கப்படும்.

  • புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழ்நாட்டிற்கு நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்.

  •