வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவல், கடந்த 24  மணிநேரத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு 361 என்ற புதிய உச்சத்தை அடைந்து இருந்த கொரோனா நோய் தொற்றின் விரியும், கடந்த 24  மணிநேரத்தில் 367 என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது . 


இதனிடையே, கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது என்ற செய்தி , வேலூர் மக்களை மேலும் கலக்கம் அடைய செய்துள்ளது . 




இது தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதார துறை அலுவலர்களை நாம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, "வேலூர் மாவட்டத்தில், 45  வயதிருக்கும் மேல் உள்ளவர்கள் சுமார் 5.40 லட்சம் பேர் உள்ளதாக கணக்கெடுக்கப்பெற்று, கோவாக்ஸின் மற்றும் கோவிஷில்டு என்று வரையறுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் 1,52,214 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது . இதில் 30  சதவீதத்திற்கும் குறைவான எண்ணைக்கையினரே இரண்டு டோஸ் இணையும் முழுமையாக செலுத்தி கொண்டுள்ளனர். மீதம் உள்ள 70  சதவீதத்தினர், தங்களுடைய முதல் டோஸை மட்டுமே பெற்றுள்ளனர் . 


கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை, சுமார் 4 லட்சம் பேர் நிலுவையில் உள்ளதாலும், சுகாதாரத்துறையிடம் கொரோனா தடுப்பூசி மிகுந்த குறைந்த எண்ணிக்கையில் (6000 முதல் 7000) இருப்பதனாலும் , பொதுமக்கள் இடையே பெரும் அச்சம் நிலவிவருகிறது. மே 1-ஆம் தேதி முதல், மத்திய அரசின் உத்தரவின் படி, தற்போது உள்ள கொரோனா தடுப்பூசியின் வயது தளர்வு 45-இல் இருந்து 18 வயதாக குறைக்கப்பட்டுள்ளதால், தடுப்பூசிகள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால், உடனடியாக போதுமான அளவு தடுப்பூசிகளை வேலூர் மாவட்டத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் .