New IPS transfers: காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஐந்து பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் திமுக அரசு பொறுப்பேற்றட பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு  பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அந்த வகையில் தற்போது, ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


இது தொடர்பாக தமிழக அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளதாவது,


சிபிசிஐடி ஏடிஜிபி அபய் குமார்


ஆயுதப்படைப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய்குமார் சிங், சிபிசிஐடி ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, சிபிசிஐடி பதிவி வகித்து வந்த ஷகில் அக்தர் இன்றுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.  


சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி


சிறைத்துறை டிஜிபி ஆக அம்ரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு சிறைத்துறை டிஜிபி ஆக இருந்த சுனில் குமார் இன்றுடம் ஓய்வு பெறுவதை அடுத்த அம்ரேஷ் புஜார் நியமிக்கப்பட்டுள்ளார்.


சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார்


சென்னை சைபர் கிரைம் பிரிவு ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐஜி-யாக ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபியாக இருக்கும் வெங்கடராமன், காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவை கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.