சென்னை எல்லையில் மேக மூட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.சென்னை எல்லையில் மேக மூட்டங்கள் அதிகமாக காணப்படுவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு தமிழ்நாடு கடற்கரையில் பெரிய மேகங்கள் நிலைக்கொண்டுள்ளன. அவை மெதுவாக நகரும் பட்சத்தில், மழையின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்கும். 


மிக கனமழை பெய்யும் இடங்கள்:


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகியவை கடற்கரையோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும். 


கன மழை பெய்யும் இடங்கள்:


வட தமிழக கடற்கரை பகுதிகள் நாகை, காரைக்கால், கடலூர், விழுப்புரம் கடற்கரை ஹாட் ஸ்பாட்டில் இருக்கும். தென் கேரளா (திருவனந்தரம், கொல்லம், பதான்மித்தா, கோட்டயம், எர்னாகுளம், இடுக்கி, ஆலாப்புழா) மற்றும் கன்னியாகுமரி இன்று முதல் நாளை வரை மழை பெய்யும். அதேபோல், நாளை வேலூர் ராணிப்பேட்டை, Tvmalai, விழுப்புரம், உள்மாவட்டம், கடற்கரைக்கு அருகில் மழை பெய்யும்.


தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து ஈரப்பதமாக காணப்படும். வரும் நாட்களில் பருவமழையின் தாக்கம் அதிகரிக்கும். பின் வரும் வாரங்களில் பருவமழையின் தாக்கம் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். 






அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 


01.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.


02.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி,  மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.