சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்க்கடலில் புதிய வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இந்த வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமானில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாற உள்ளது. இந்த புதிய வளிமண்டலட சுழற்சி அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதனால் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு அபாயம் இருப்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சுகுமாறன் | 29 Mar 2021 12:47 PM (IST)
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
Cyclone__