"மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் எளிய நவீன வசதிகள், அவசர உதவிக்கு ரயில் லோகோ பைலட்டுடன் பேச டெலிபோன் வசதி, சிசிடிவி கண்காணிப்பு, தானியங்கி கதவுகள் ஒவ்வொரு  இருக்கை அருகிலும் மொபைல் சார்ஜிங் பாய்ண்ட்” என ஏகப்பட்ட வசதிகள் வந்தே பாரத் ரயிலில் உள்ளன.

 

திருநெல்வேலி - சென்னை ரயில் நிலையங்களுக்கு இடையே செப்டம்பர் 24 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி  வந்தே பாரத் ரயிலில் இதுவரை 77 சதவீதம் பேர் குடும்பத்துடன் பயணம் செய்துள்ளனர். 16 சதவீத அளவில் வர்த்தக பிரமுகர்கள் பயணம் செய்துள்ளனர். மொத்தத்தில் 36 சதவீத அளவில் 35 முதல் 49 வயது வரை உள்ள பொதுமக்கள் வந்தே பாரத் ரயிலில் விரும்பி பயணிக்கின்றனர்.




64 சதவீதம் மற்ற வயது வரம்பில் உள்ள பயணிகள் பயணிக்கின்றனர். தெற்கு ரயில்வே அளவில் ஆறு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை - மைசூர், சென்னை - கோயம்புத்தூர், சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா பிரிவில் தலா ஒரு வந்தே பாரத் ரயிலும், கோட்டயம் மற்றும் ஆலப்புழை வழியாக திருவனந்தபுரம் - காசர் கோடு பிரிவில் இரு தனி தனி வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் அனைத்திற்கும் எதிர்பாராத அளவில் பயணிகள் அபரிதமான ஆதரவு  அளித்து வருகின்றனர்.



 

இதற்குக் காரணம் மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயில்களின் வேகம், நவீன  மற்றும் விமான பயணத்திற்கு இணையான வசதிகளான இணையதள சேவை உதவியுடன் கூடிய மின்னணு தகவல் பலகைகள், வசதியான இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த எளிய நவீன வசதிகள், அவசர உதவிக்கு ரயில் லோகோ பைலட்டுடன் பேச டெலிபோன் வசதி, சிசிடிவி கண்காணிப்பு, தானியங்கி கதவுகள், ஒவ்வொரு  இருக்கை அருகிலும் மொபைல் சார்ஜிங் வசதி, எக்ஸிக்யூட்டி வகுப்பில் இருக்கைகளை திருப்பி ஜன்னல் வழியாக நேரடியாக வேடிக்கை பார்க்கும் வசதி, ருசியான சைவ, அசைவ உணவு, காபி, டீ, தண்ணீர் பாட்டில் வழங்கல், ரயிலின் முன் பகுதியில் இருந்து இறுதிப்பகுதி வரை செல்லும் வசதி, காற்று அழுத்தத்தில் இயங்கும் சுத்தமான கழிப்பறைகள் ஆகியவை ஆகும். இந்த நவீன வசதிகள் பயணிகளை வந்தே பாரத் ரயிலில் அதிக அளவில் பயணிக்க ஈர்க்கின்றன” என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.