கடனை செலுத்தி விட்டு மனைவியை அழைத்து செல்; வங்கி அதிகாரிகளின் செயலால் கணவர் அதிர்ச்சி


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்ப கஷ்டம் காரணமாக வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ. 35 ஆயிரம் கடனாக பெற்று இருந்தார். மீதம் 10 வார தவணை பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தவணையை வசூல் செய்ய வந்த வங்கி ஊழியர், வீட்டில் கணவர் பிரசாந்த் இல்லாதால் வீட்டில் இருந்த மனைவி கௌரி சங்கரி  கணவர் வந்து தவணையை செலுத்தி விட்டு அழைத்து செல்லட்டும் என்று கூறி கெளரியை அழைத்துச் சென்றுள்ளார்.மேலும் படிக்க


NEET UG Exam Hall Ticket: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்ட என்டிஏ: பதிவிறக்கம் செய்வது எப்படி?


மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று (மே 2)  வெளியானது.  நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதை https://neet.ntaonline.in/frontend/web/admitcard/indexindex என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் படிக்க


Mettur Dam: அதிரடியாக சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்று நீர் நிலவரம் இதுதான்


நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 82 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக இருந்தது.  இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 27 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க


TN Weather Update: கொளுத்தும் வெயில்.. கரூரில் 44 டிகிரி செல்சியஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு எப்படி இருக்கும்?


அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய   மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச  வெப்பநிலை  2°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க


Nainar Nagendran Case: ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்.. நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் ஆஜர்..!


கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். முருகன் மற்றும் ஆசைத்தம்பி இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர்.மேலும் படிக்க